மத்திய வங்கி மேலும் பெருந்தொகை பணத்தை அச்சிட்டுள்ளது?

4 years ago
Sri Lanka
(136 views)
aivarree.com

இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு கணக்கு வழக்கின்றி புதிதாக பணம் அச்சிடப்பட்டமையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் மத்திய வங்கி பல பில்லியன் ரூபாய்களை புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாத்திரம் 17.02 பில்லியன் ரூபாய்களை மத்திய வங்கி அச்சிட்டு வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மேலும் இலங்கையில் பணவீக்கத்தை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.