மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா

5 years ago
tamilnewsline.com

நடிகை சமந்தா, ஹிந்தி வெப் தொடரொன்றில் நடிகர் வருண் தவானுடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த தொடரை இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டீ.கே ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.

அமெரிக்காவில் பிரபலமான சிட்டாடல் என்ற வெப் தொடரின் கதையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்படுகிறது.

இந்த தொடரில் நடிப்பதற்காக சமந்தா, சண்டை பயிற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இதற்கு முன் ‘ஃபேமிலி மேன் 2′ என்ற வெப் தொடரில் போராளியாக நடித்து உலகளவில் புகழ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Reported by
Editorial Reporter