ஜனாதிபதி – TNA சந்திப்பு

4 years ago
Sri Lanka
(8 views)
aivarree.com

தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பிரதிநிதிகளை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

எவ்வாறாயினும் இந்த சந்திப்பில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோ அறிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையில் ஜனாதிபதியை சந்திப்பது அவரை சர்வதேசத்தின் பிடியில் இருந்து விடுவிப்பதாக அமையும் என்தால் அதனை செய்ய முடியாது என்று டெலோ தெரிவித்துள்ளது.