ஐ.பி.எல் தொடருக்கு நன்றி சொல்லும் இந்திய இளம் பந்துவீச்சாளர்

4 years ago
SPORTS
(63 views)
aivarree.com

ஐ.பி.எல். தொடர் மூலம் அறிமுகமான இந்திய பந்துவீச்சாளர் அவேஷ் கான், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்த மாதம் இடம்பெறும் 20க்கு20 தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தாம் இந்திய கிரிக்கட் அணிக்கு உள்வாங்கப்படுவதற்கும், தமது வளர்ச்சிக்கும் ஐ.பி.எல் தொடரே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக கடந்த ஆண்டு இணைக்கப்பட்டிருந்தாலும், விளையாட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவேஷ் கான் 16 போட்டிகளில் 24 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

Reported by
Editorial Reporter