இலங்கை மீளுமாம் | சீனாவின் நம்பிக்கை

4 years ago
Sri Lanka
(111 views)
aivarree.com

இலங்கை தமது தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளிக்கும் என நம்புவதாக இலங்கைக்கான சீனாவின் தூதரகம் தெரிவித்துள்ளது.

“இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முயற்சிகளால், நாடு தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து இன்னும் பெரிய வளர்ச்சியை காணும் என்று நம்பப்படுகிறது” என்று சீன தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தனது இயலுமைக்கு உட்பட்டு உதவிகளை வழங்கி வருவதாகவும், தொடர்ந்தும் அந்த உதவிகள் வழங்கப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.