1 டொலருக்கு 250/- மேல் கிடைக்கும் | அமைச்சரவையில் அதிரடி முடிவு

4 years ago
Sri Lanka
(71 views)
aivarree.com

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சட்டரீதியாக வங்கிகள் ஊடாக அனுப்பப்படும் பணத்துக்கு டொலர் ஒன்றுக்கு 10/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இந்தத் தொகையை 38 ரூபாவாக ஏப்ரல் வரை அதிகரித்து வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஒரு டொலருக்கான இலங்கை ரூபா பெறுமதி 230 ரூபா நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதன் கொள்முதல் பெறுமதியுடன் 38/- மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படும்.

இதன்படி வெளிநாடுகளில் இருந்து வங்கி ஊடாக அனுப்பப்படுகின்ற ஒவ்வொரு டொலருக்கும், 250 ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்சப் மூலம் உடனடியாக எமது செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே க்ளிக் செய்து அய்வரி WhatsApp குழுவில் இணையுங்கள்