ரூபாய் பெறுமதியை அதிரடியாக குறைத்த மத்திய வங்கி

4 years ago
Sri Lanka
(68 views)
aivarree.com

உடன் அமுலாகும் வகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியை 1 டொலருக்கு 230/- என மத்திய வங்கி மதிப்பிறக்கம் செய்துள்ளது.

நாட்டில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கறுப்பு சந்தையில் டொலர் ஒன்று 240/- அடிப்படையில் விற்பனையாகிறது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக மத்திய வங்கி கட்டமைப்பு ஊடாக அல்லாமல், மாற்று வழிமுறைகளில் பணம் அனுப்பும் நிலைமை அதிகரித்துள்ளது.

இந்த நிலையை போக்கி, மத்திய வங்கிக்கு டொலர் கிடைக்கும் வகையில், டொலரின் பெறுமதியை உயர்த்தி, ரூபா மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது.