சரணடைய அறிவுறுத்தும் புட்டின் / திங்கள் காலை / 10 செய்தி சுருக்கம்

4 years ago
World
(104 views)
aivarree.com

உக்ரைன் சரணடைய வேண்டும் – அவ்வாறு இல்லாவிட்டால் தமது படையெடுப்பு இன்னும் தீவிரமாக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.  


சரணடைய வேண்டும் என்ற புட்டினின் அறிவுறுத்தலுக்கு உக்ரைன் இன்னும் பதிலளிக்கவில்லை.


உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் குறிவைத்துள்ளதால், உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.


திங்கள் காலை வரையான 10 செய்திகளின் சுருக்கம் வருமாறு.


1. மீண்டும் மீண்டும் இடம்பெறும் போர்நிறுத்த மீறல்களால் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் முயற்சிகள் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்தன. நகர மக்கள் மின்சாரம், தண்ணீர் இன்றி சிக்கியுள்ளனர்.


2. உக்ரைன் இராணுவம், மைகோலாயிவ்க்கு வெளியே ரஷ்யப் படைகளுடன் ‘கடுமையான மோதலில்’ ஈடுபட்டு வருகிறது. இந்த நகர் ரஷ்யாவிடம் விழுந்தால், உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஒடெசாவுக்கான நுழைவு பாதை முடக்கப்படும்.

 
3. மத்திய உக்ரைனில் உள்ள வின்னிட்சியா விமான நிலையத்தை ரஷ்ய ஏவுகணைகள் சரமாரியாகத் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்தார்.


4. உக்ரைனில் பொதுமக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றிய நம்பகமான அறிக்கைகள் அமெரிக்காவிடம் இருப்பதாக, அமெரிக்க ராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

Telegram குழுவில் இணைந்து பாதுகாப்பான முறையில் எமது செய்திகளை கைப்பேசியில் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்


5. இர்பின் நகரத்திலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த பொதுமக்கள் ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் சிக்கியுள்ளனர். 


6. நெட்ஃப்லிக்ஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவுடனான தொடர்பைத் துண்டித்துள்ளன. டிக்டொக் தமது சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளது.


7. மேற்கத்தியப் பொருளாதாரத் தடைகளால் கறுப்புச் சந்தை உருவாகலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில், ரஷ்யாவில் வர்த்தக நிலையங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.


8. ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிராக ரஷ்யா முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 4,600க்கும் மேற்பட்டோரை ஞாயிற்றுக் கிழமை மாத்திரம் காவல்துறை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.


9. ‘பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது போர் மூலமாகவோ உக்ரைனில் தமது இலக்குகளை அடைவேன்’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.


10. உக்ரைனுக்குப் போர் விமானங்களை வழங்க போலந்துக்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது – ஆனால் இது நேட்டோ உறுப்பினர்களை போருக்கு இழுப்பதாக அமையும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.