பேராபத்தில் கொழும்பு துறைமுகம்

5 years ago
tamilnewsline.com

டொலர் தட்டுப்பாடு காரணமாகக் கொழும்பு துறைமுகத்தில் பெருமளவான பொருட்களை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமை, வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


இதனால் பெருந்தொகையான பொருட்கள் அங்குத் தேங்கியுள்ளன.
அவற்றில் பெருமளவான ஆபத்தான பொருட்களும் அடங்குகின்றன.


விரைவாகத் தீப்பற்றக்கூடிய ஆபத்தான இரசாயன பொருட்கள், வெப்பத்தில் வைத்திருக்க முடியாதவை என்ற போதும், பல நாட்களாக அவை அங்குத் தேங்கியுள்ளன.


அவற்றால் துறைமுகத்துக்கு பெரும் ஆபத்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


– செய்தி மூலம் – டெய்லி மிரர் 

Reported by
Editorial Reporter