இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் செயற்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரது பொறுப்புகள் அனைத்தும் சி.பி.ரட்நாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
