அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதவி விலகினார்?

4 years ago
Sri Lanka
(85 views)
aivarree.com

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சுப் பொறுப்பை தம்மால் முன்னெடுத்து செல்ல முடியாது என அறிவித்துள்ளார்.

அமைச்சு பதவியில் இருந்து விலகவில்லை – ஆனால் அமைச்சுப் பொறுப்பினை முன்னெடுக்கவோ அமைச்சரவை கூட்டங்களுக்கு செல்லவோ போவதில்லை என அவர் அறிவித்தார்.


கொழும்பில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தாங்கள் முன்வைத்த தீர்வுதான் விமல் மற்றும் கம்மன்பிலவின் பதவி நீக்கத்துக்கு காரணம் என்றால், தம்மால் இந்த பதவியில் தொடர முடியாது என அவர் கூறினார்.

ஆனால் நாங்கள் எதிர்கட்சியில் இணைய மாட்டோம் – நாங்கள் எங்களது செயற்பாடுகளை தொடர்வோம், என்றார் வாசுதேவ.