IMF தாக்கம்/ வட்டி வீதங்களை உயர்த்திய மத்திய வங்கி.

4 years ago
Sri Lanka
(101 views)
aivarree.com

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கையை இறுக்கப்படுத்தும் வகையில் தமது கொள்கை வட்டி வீதங்களை 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியுள்ளது.

இதன்படி நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதத்தை 6.5 சதவீதமாகவும், நிலையான கடன்களுக்கான வட்டிவீதத்தை 7.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற மூலதன திட்டங்கள் அனைத்தையும் ஒத்துவைக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மேலும் வெளிநாட்டு நிதி மற்றும் கடனற்ற அந்நிய செலாவணி வரவுகளை அவசர அடிப்படையில் திரட்டுவதற்கும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆர்ட்டிகல் 4 அறிக்கை வெளியாகிய மறுநாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.