டொலர் பிரச்சினை/புலம்பெயர்ந்தோருக்கு வலை வீசும் இலங்கை

5 years ago
tamilnewsline.com

இலங்கையில் டொலர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், புலம்பெயர்ந்து வசிக்கின்றவர்களின் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து இலங்கை ஆராய்ந்து வருகிறது.

இதுதொடர்பாக முதலீட்டுத்துறை அமைச்சர் டி.வி.சானக தலைமையில் முதலீட்டு சபை முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறது.

புலம்பெயர்ந்த நிலையில் வாழ்கின்ற மக்கள் இலங்கையில் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்குதல் மற்றும் அவர்களை ஈர்க்கும் வகையிலான முதலீட்டுத் திட்டங்களை உருவாக்குதல் என்பன இதன் நோக்கமாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் புலம்பெயர்ந்தோருக்கான அழைப்பினை விடுத்திருந்தார்.

இதனை அடிப்படையாக வைத்து தற்போதைய முன்னெடுப்பு இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.