தடுப்பூசி போடாத சுற்றுலா பயணிகளையும் அனுமதிக்க உள்ளது இஸ்ரேல்

5 years ago
tamilnewsline.com

இஸ்ரேல் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தடுப்பூசி பெற்றிராத சுற்றுலா பயணிகளுக்கும் நாட்டில் பிரவேசிக்க அனுமதி வழங்க உள்ளது.

அந்த நாட்டு பிரதமரின் தகவல் படி, இஸ்ரேலில் நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றன கொவிட் நோயாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதன் அதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் அளவில் 85,000க்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது நாளாந்தம் 10,000 வரையில் குறைவடைந்து இருக்கிறது.

அத்துடன் இதுவரையில் கொவிட் நோய் காரணமாக அங்கு 9,842 பேர் மரணித்திருகின்றனர்.

இஸ்ரேலிலேயே முதன்முதலில் நாடு முடக்கப்பட்டதுடன், தடுப்பூசி வழங்கலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது