ஜெனீவாவை இலக்கு வைத்து நடமாடும் சேவை / காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

5 years ago
Sri Lanka
(62 views)
aivarree.com

வடக்கு மாவட்டங்களில் நீதி அமைச்சினால் காணாமல் போனோரை இலக்கு வைத்து நடமாடும் சேவைகள் நடத்தப்படுகின்றன.

இதுதொடர்பாக முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத் தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி ஐயம் வெளியிட்டுள்ளார்.

‘இவை அடுத்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அரசு சார்பில் அறிக்கையை முன்வைப்பதை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.

இதற்காக வலிந்து காணால் ஆக்கப்பட்டோரை அரசு பயன்படுத்த முயல்கிறது.

காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக செய்ய முடியாததை இதன் மூலம் செய்ய முயற்சிக்கின்றனர், எனவே இதனை புறக்கணிக்க வேண்டும்’ என்றார்.

இந்த கதையில் இன்னும் வாசிப்பதற்கு
Reported by
சண்முகம் தவசீலன்