கம்பஹாவில் உள்ள மேலதிக வகுப்பு ஒன்றில் உள்ள பெண்கள் கழிவறையில் நவீன கமெரா பொருத்தப்பட்டமை தொடர்பில் காவல்துறை தகவல் தொழில்நுட்பப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலதிக வகுப்பிற்குச் சென்ற மாணவிகள் சிலர் இதனைக் கண்டு தங்களது பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.
அவர்களால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு இணங்க, இந்த மேலதிக வகுப்பின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர்கள் என 10 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த இந்த கமெராவின் மூலம் கைப்பேசி அல்லது கணினித் திரையில் நேரடியாகப் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த கமெராவை பொருத்திய நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் வட்சப்பில் பெற்றுக் கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்துக் கொள்ளுங்கள்.
WhatsApp Group >> https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w
லங்காதீப
