தமிழ் கைதிகள் அச்சுறுத்தப்பட்டமை/ லொஹான் ரத்வத்த தொடர்பான விசாரணை அறிக்கையை கோரும் உயர்நீதிமன்றம்

5 years ago
tamilnewsline.com

அனுராதபுரம் சிறையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த ஆண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி இருந்தார்.

இந்த சம்பவத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 8 கைதிகள் சார்பில் எம் ஏ சுமந்திரன் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் விசாரணை செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புபட்ட எட்டு சிறைக் கைதிகளையும் அனுராதபுரம் சிறையில் இருந்து பாதுகாப்பான சிறைக்கு மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்த வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.