தனுஷ் – ஐஷ்வர்யா / 5 வருடங்களாகவே பிரிந்துதான் இருந்தார்களாம்.

4 years ago
Entertainment
(169 views)
aivarree.com

தனுஷ் மற்றும் ஐஷ்வர்யா ஆகியோர் அண்மையில் தங்களது விவாகரத்து செய்தியை வெளியிட்டிருந்தனர்.

இதன் பின்னர் அவர்கள் குறித்த பல்வேறு தகவல்களையும் கிசுகிசுகளையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் பிரபல பத்திரிகையான டைம்ஸ் ஒஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, அவர்கள் இருவரும் 5 அல்லது 6 வருடங்களாக பிரிந்தே இருந்தனர் என்று அறிய முடிகிறது.

தங்களுக்கு இடையில் பல்வேறு பிரிவினைகளைக் கொண்டிருந்த அவர்கள், தங்களது உறவை சீர்செய்ய முயற்சித்திருந்தனர்.

எனினும் அது கைகூடாத நிலையிலேயே அவர்கள் தங்களது விவகாரத்து செய்தியை வெளியிட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.