ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்து சிறையை கைப்பற்றிய குர்திஷ் படை

4 years ago
World
(44 views)
aivarree.com

ஆறு நாட்களுக்கு முன்பு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவால் கைப்பற்றப்பட்ட வடகிழக்கு சிரியாவில் உள்ள சிறைச்சாலையின் முழுக் கட்டுப்பாட்டையும் மீண்டும் பெற்றுள்ளதாக குர்திஷ் தலைமையிலான போராளிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஹசாக்காவின் குவேரன் சிறைக்குள் இருந்த ‘அனைத்து டேஷ் பயங்கரவாதிகளும்’ சரணடைந்ததாக அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ட்வீட் செய்தார்.

பல நூறு சிறுவர் கைதிகளும் அவர்ககளில் உள்ளடங்குகின்றனர்.

வியாழன் அன்று ஐஎஸ் அமைப்பினர் பாரிய வெடிப்பை நடத்த முயன்றதில் இருந்து இதுவரை நடந்த மோதலில் குறைந்தது 181 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.