ரூ 1000 வேதனம் – கூட்டு ஒப்பந்தத்தை மீள நாடும் அரசாங்கம்

5 years ago
tamilnewsline.com

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக வழங்கும் விடயத்தில் கூட்டு ஒப்பந்தம் அவசியம் என, அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட அமைச்சுசார் ஆலோசனை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது, இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஸ்பத்திரன, 1000 ரூபாய் வேதன விடயம் நீதிமன்ற வழக்காக இருப்பதால் அது குறித்து கருத்து கூற முடியாது என்றார்.

எனினும் தம்மை பொறுத்தவரையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தை கொண்டுவருதே தீர்வாக அமையும் எனவும் அவர் கூறினார்.

பெருந்தோட்ட அமைச்சுசார் ஆலோசனை குழு கூட்டம் குறித்து நாடாளுமன்ற ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையை வாசிப்பதற்கு…..