மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெள்ளையடித்தது இந்தியா

5 years ago
tamilnewsline.com

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இந்த தொடரின் மூன்றாவது போட்டி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிலையில், முதலில் துடுப்பாடிய இந்தியா சகல விக்கட்டுகளையும் இழைந்து 265 ஓட்டங்களைப் பெற்றது.


266 என்ற வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் துடுப்பாடியது.


எனினும் 37.1 ஓவர்களில் 169 ஓட்டங்களுக்குச் சகல விக்கட்டுகளையும் இழந்து, 96 ஓட்டங்களால் இந்தியாவிடம் தோல்வியுற்றது. 


இந்தியாவின் ஸ்ரெயாஸ் ஐயர் ஆட்ட நாயகனாகவும், ப்ரசித் க்ரிஸ்ணா தொடர் நாயகனாகவும் தெரிவாகினர்.