புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் கடற்படைத் தளபதியின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இருவருக்கிடையில் நினைவுப் பரிசில்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் தூதுவருக்கு கடற்படைத் தளபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
