இலங்கை செய்திகள்
நாட்டில் இன்று 878 பேருக்கு கொவிட்

நாட்டில் மேலும் 878 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 508,208 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 60,902 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 882 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 435,022 ஆக அதிகரித்துள்ளது.