முக்கிய செய்திகள்

கடற்கரை பகுதியில் 68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

இலங்கை கடற்படையினர் மன்னார், நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் கைவிடப்பட்டிருந்த 228 கிலோவுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சா தொகையினை மீட்டுள்ளனர்.

 

கடலோரப் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதை தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 21 ஆம் திகதி வடமத்திய கடற்படை பிரிவினர் நறுவிலிக்குளம் கடற்கரையில் நடத்திய சிறப்பு நடவடிக்கையிலேயே கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட இந்த கேரளா கஞ்சா தொகையினை மீட்டுள்ளனர்.

 

 

228.100 கிலாம் கிராம் எடையுள்ளதாக இந்த கஞ்சாவின் பெறுமதி சுமார் 68 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றியே இந்த விசேட நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button