முக்கிய செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்.

இதனை பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.309 ரக விமானத்தில் பிரதமர் அடங்கிய தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் இன்று அதிகாலை 12.01 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்குள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button