இலங்கை வருகிறார் மோடி?

5 years ago
tamilnewsline.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வரவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம், மீனவர் பிரச்சினை போன்ற இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்துவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோர் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.