உலக செய்திகள்

அமெரிக்க ஹெலிகாப்டர் சான் டியாகோ கடற்பரப்பில் வீழ்ந்து விபத்து

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சான் டியாகோ கடற் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

An MH-60S Knighthawk helicopter lands on the flight deck of the aircraft carrier USS Harry S. Truman

இந் நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MH-60S என்ற ஹெலிகாப்டர், சான் டியாகோ கடற்கரையிலிருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணியளவில் வழக்கமான விமானப் பணிகளை மேற்கொண்டபோதே கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை.

ஒரு MH-60S ஹெலிகாப்டர் பொதுவாக நான்கு பேர் கொண்ட குழுவுடன் இயங்குகிறது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் தேடுதல் நடவடிக்கைகளில் பல கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button