உலக செய்திகள்

ஜோ பைடன்-ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுவது அமெரிக்காவின் சிறந்த முடிவு

20 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தானில் இருந்து படையினரை திரும்பப் பெறுவது அமெரிக்காவின் சிறந்த மற்றும் சரியான முடிவு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார்.

 

நான் உங்களுக்கு என் வார்த்தையை அளிக்கிறேன், இது சரியான முடிவு, புத்திசாலித்தனமான முடிவு மற்றும் அமெரிக்காவின் சிறந்த முடிவு என்று நான் முழு மனதுடன் நம்புகிறேன் என்று பைடன் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது என்று தனது சக அமெரிக்கர்களிடம் கூறிய அவர், இந்த போரை எப்போது முடிப்பது என்ற பிரச்சினையை எதிர்கொண்ட நான்காவது ஜனாதிபதி தான் என்றும் தெரிவித்தார்.

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று அமெரிக்க மக்களுக்கு உறுதி அளித்தேன். அதன்படி செய்துள்ளேன்.

20 வருட யுத்தத்தில் 2,448 அமெரிக்க சேவை பணியாளர்கள் மற்றும் 3,846 அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இது அமெரிக்காவிற்கு குறைந்தது 2.4 டிரில்லியன் டொலர் செலவை ஏற்படுத்தியது.

20 வருட யுத்தம் இனி அமெரிக்காவின் தேசிய நலனுக்கு சேவை செய்யாது என்றும் பைடன் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரை வெளியேற்றும் பணி “ஒரு அசாதாரண வெற்றி” என்று அழைத்தார்,

இருப்பினும் இது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button