பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எதிராக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதியிடம் முறைப்பாடு ஒன்றை தெரிவித்துள்ளார்.
தாங்கள் விடுகின்ற கோரிக்கைகளை அமைச்சர் சரத் வீரசேகர நிராகரிப்பதாக அவரது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலீஸ் நியமனங்கள் தொடர்பில் அமைச்சர்களால் தமக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் உரிய நடைமுறைகளை மீறி அவ்வாறான நியமனங்களை வழங்க முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வாசு தேவநாணயக்கார ஆகியோர் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்துவருவதாக அறிய முடிகிறது.
த ஐலேண்ட் பத்திரிகை
