1 கிலோ 64 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில பிரதேசத்தில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரும் அவரது கணவரும் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தமை தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
