தொழில்நுட்பம்

பல்ஸ் அளவை செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் உயர்ந்தது. இந்த காலகட்டத்தில், நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு உடலில் சுவாச அளவு சீராக உள்ளதா என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.

எனினும், தரமான பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்க குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரம் வரை செலவிட வேண்டும். ஊரடங்கு உத்தரவின் போது எல்லோரும் இவ்வளவு செலவு செய்ய முடியாது என்பதை அறிந்த ஸ்டார்ட் அப்கள் மொபைல் செயலிகள் வழியாக ஆக்ஸிமீட்டர் பயன்பாடுகளை வழங்குகின்றன.

கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்,கேர்ப்ளிக்ஸ் வைட்டல்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி உங்கள் ஆக்ஸிஜன் நிலை, துடிப்பு மற்றும் சுவாச வீதத்தைக் கண்டறிந்து அறிக்கை செய்கிறது. செயலியைப் பயன்படுத்த, ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் ஒளிரும் விளக்குகளில் உங்கள் விரலை சில விநாடிகள் வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button