எச்.ஐ.வி. வைரஸின் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு

4 years ago
World
(34 views)
aivarree.com

எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரஸின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு “வி.பி. மாறுபாடு” என்று பெயரிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், இது எச்.ஐ.வி. வைரஸின் மிகக் கொடிய மாறுபாடாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாறுபாடு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வேகமாக பாதிக்க செய்யும்.

ஆனாலும் நவீன சிகிச்சைகள் காரணமாக இது பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Reported by
Editorial Reporter