சினிமா

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாதுதுரை பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவைகளைப் பெறுவது தாமதமானது.

இந்நிலையில், கொரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் 2 காா்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா்.

இந்த நிகழ்வின் போது, ​​விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவா் சி.எஸ். குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகரிடம் இரண்டு காா்களையும் மன்ற நிா்வாகிகள் ஒப்படைத்தனா்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button